Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 01 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம்.நூர்தீன்
பாடசாலை மாணவர்களின் போசணை மட்டத்தை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நசிர்தீன், நேற்று செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தார்.
போசணை மட்ட பிரதேச செயற்பாட்டுக்குழு அங்குரார்ப்பணக் கூட்டம், காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
காத்தான்குடியில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களில் 30 சதவீதமான மாணவர்கள் தினமும் காலை உணவு உண்ணாமலேயே செல்வதாக தெரியவருகிறது. இதனால் பிள்ளைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க வேண்டும். குழந்தைகளுக்கான போசாக்கு உணவு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.
போசணை மட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சுகாதார திணைக்களத்தினால் மட்டும் போசணை மட்டத்தை உயர்த்தும் வேலையை செய்ய முடியாது. இதனால், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago