Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 01 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.ஜே.எம்.ஹனீபா
மட்டக்களப்பு, சித்தாண்டி விநாயகர்புரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சின்னத்தம்பி உதயசிறிக்கு அரசாங்க தொழில் வாய்ப்பை வழங்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவர், கடந்த பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி, சிகிரியா பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பையடுத்து விடுதலையானார்.
தனது மகளுக்கு அரசாங்க வேலையை பெற்றுத்தருமாறும் வயது போன தன்னை தனது மகள் பார்த்துக்கொள்வதற்கு இது உதவியாக இருக்குமெனவும் உதயசிறியின் தாய், முதலமைச்சரிடம்; வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து, உதயசிறியின் சுயவிபரக்கோவையை முதலமைச்சர், திங்கட்கிழமை (29) பெற்றுக்கொண்டார். இதில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் ராஜேஸ்வனும் கலந்துகொண்டார்.
இது தொடர்பாக முதலமைச்சரிடம் கேட்ட போது, 'இந்த யுவதிக்கு மிகவிரைவில் வைத்தியசாலையில் அரசாங்க வேலையொன்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன். நான் முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து சுமார் 1,500க்கும் அதிகமான கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன' என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago