2025 மே 15, வியாழக்கிழமை

சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் நால்வர் பணி நீக்கம்

Princiya Dixci   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறைக்கைதியொருவர் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை தப்பியோடிய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் நால்வரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் இச்சிறைச்சாலையின் பொறுப்பதிகாரியும் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், தப்பியோடிய கைதியை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .