Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 01 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது கட்சி சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று புளொட் அமைப்பின் தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் புளொட் கட்சி சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் தெரிவு தொடர்பாக இன்று புதன்கிழமை (01) வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தும், மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் வன்னியிலும் போட்டியிடுவதற்கான முடிவுகள் இதுவரை எட்டப்படவில்லை. நிச்சயமாக இரண்டு மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கும். அதற்கு பிறகே வேட்பாளர் சம்பந்தமாக உத்தியோகபூர்வ முடிவுகள் எடுக்கப்படும்.
இதுவரை மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக எந்தவொரு நபரையும் எமது கட்சி சார்பாக நிறுத்துவதற்கு முடிவெடுக்கப்படவில்லை. பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் இம்முறை கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கவுள்ளதால் இத்தொகுதியில் எமது கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது என்பது சாத்தியமற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வேறு தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago