2025 மே 15, வியாழக்கிழமை

கைம்பெண்களுக்கு காப்புறுதி

Suganthini Ratnam   / 2015 ஜூலை 02 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் 100 கைம்பெண்களுக்கு காப்புறுதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான பத்திரங்கள்  வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை மாலை வழங்கப்பட்டன.  

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமானா தக்காபுல் நிறுவனத்தின் காத்தான்குடி முகாமையாளர் ஏ.எம்.அனீஸ், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல்காதர் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்துக்காக ஒவ்வொரு கைம்பெண்ணுக்கும்  வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தினால் 1,155 ரூபாய் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர்  சல்மா ஹம்சா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .