Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 02 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் நிலவிய அதிபர் நியமன சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இதை அடுத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோரால் இனிப்பு வழங்கி இன்று வியாழக்கிழமை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை, இப்பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு பிறிதொரு பாடசாலையில் நியமனம் வழங்கப்பட்டது.
இப்பாடசாலைக்கு திடீரென புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோரும் மாணவர்களும், ஏற்கெனவே இப்பாடசாலையில் கடமையாற்றிவந்த அதிபரே வேண்டும் எனக் கோரி வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், இப்பாடசாலைக்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம்இ மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன்;இ ஏறாவூர்ப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கும் பெற்றோருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதற்கமைய இப்பாடசாலையில் ஏற்கெனவே கடமையாற்றிவந்த அதிபர் அதே பாடசாலையில் தொடர்ந்து கடமையாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து, மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago