Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 10 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
விபத்துக்களை தவிர்க்கும் சமூகமட்ட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் காயங்களுக்கான திட்டத்தின் மட்டக்களப்பு, அம்பாறை முகாமையாளர் எஸ்.பன்னீர்ச்செல்வம் தெரிவித்தார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட எட்டு முன்னணி நகரப் பாடசாலைகளை சேர்ந்த சுமார் ஐந்நூறு மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் செயற்பாடு நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு புனித சிசிலியா உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது.
பாதை ஒழுங்குவிதிகள் மற்றும் சிறுவர்களால் அனுசரிக்கப்படவேண்டிய போதனைகளை வினைத்திறனுள்ள மட்டத்தில் விஸ்தரிப்பது குறித்து இந்த செயற்றிட்டம் அமைந்திருந்தது.
இலங்கையில் பொதுவாக பாதை நடைமுறைகளை வளர்ந்தோர் சிறியோர் எவருமே பின்பற்றாததால் நாளாந்தம் அதிக விபத்துக்கள் சம்பவிப்பதாக இங்கு இடம்பெற்ற நிகழ்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டது.
வீதியில் நடக்கும்போது எதிரே வரும் வாகனங்களும் இன்னபிற போக்குவரத்துச் சாதனங்களும் கண்ணுக்குத் தெரியும்படியாக நடந்துசெல்வதே அறிவார்ந்ததும் சட்டரீதியான பயணமுமாகும். அதற்காக நடைப்பயணிகள் பாதையில் தமது வலப்பக்கத்தை பயன்படுத்தவேண்டும். ஆனால், இலங்கையில் இந்த பாதை ஒழுங்கு முறையை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை என்ற விழிப்பூட்டலும் இடம்பெற்றது. எனவே, இது குறித்து முதலில் பாடசாலைச் சமூகத்திற்கு அறிவூட்ட வேண்டும். அதற்கமைவாக பாடசாலை மட்டத்திலிருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 hours ago
2 hours ago