2025 மே 15, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் த.தே.கூ. 4 ஆசனங்களை பெறும்: செல்வராசா

Suganthini Ratnam   / 2015 ஜூலை 10 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு ஆசனங்களை பெறுமென்று  கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனுவை  இன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. மூன்று முன்னாள் நாடாhளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாணசபையின்  இரண்டு உறுப்பினர்களும் கல்விப் பணிப்பாளர் என சிறந்த வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதுடன், ஒரு இளைஞரும் போட்டியிடுகின்றார். இந்த  மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு பெண் வேட்பாளரை களமிறக்க முயற்சித்தபோதும், அது கைகூடவில்லை' என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .