2025 மே 15, வியாழக்கிழமை

பால்நிலை சார் வன்முறைகளை வெளிக்கொணருதல் பற்றிய மாநாடு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 10 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பாலியல் மற்றும் பால்நிலை சார்ந்த வன்முறைகளை வெளிக்கொண்டு வருதல் பற்றிய மாநாடு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகி இன்று  வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

பாலியல் மற்றும் பால்நிலை சார்ந்த வன்முறைகளை வெளிக்கொண்டு வருதல் எனும் தலைப்பில் இரு நாள் மாநாட்டை கிழக்குப் பல்கலைக்கழகமும் பொதுநலவாய பல்கலைக்கழக ஒன்றியமும் இணைந்து நடத்துகின்றது,

இந்த மாநாட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், துறை சார்ந்த நிபுணர்கள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் ஆர்வக் குழுக்களும்  கலந்து கொண்டனர். பல்வேறு துறைசார்ந்த சுமார் 150 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .