Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 11 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களில் போட்டியிடுவதென நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை முடிவெடுத்துள்ளதாக முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, இன்று சனிக்கிழமை (11) வெளியிட்டுள்ள ஊடக றிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் காங்கிரஸ் உடன் செய்துகொண்டுள்ள தேர்தல் கூட்டணி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச் சின்னத்தில் இரு வேட்பாளர்களையும் திருகோணமலை மாவட்டத்தில் யானை சின்னத்தில் ஒரு வேட்பாளரையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி களமிறக்கிறது.
ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவமிக்க மாற்றம் இன்னும் முழுமை பெறவில்லை. அத்துடன் புதிய சவால்களும் தோன்றியுள்ளன.
தோற்கடிக்கப்பட்ட சக்திகளை மீண்டும் ஒருமுறை தோற்கடிக்க வேண்டியது ஒரு தேசிய கடமையாக மாறியுள்ளது. இந்த நோக்கங்களை அடைவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னனியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஏற்படுத்திக்கொண்டுள்ள புரிந்துணர்வு அடிப்படையிலான தேர்தல் கூட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பலமான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான வியூகமாகவே இது பார்க்கப்படல் வேண்டும். தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள சவாலை எதிர்கொள்வதற்கு இதுவே சாத்தியமான முடிவாகும்.
இரு தரப்பினப்பினரதும் தனித்துவத்தையும் சுயாதீனத்தையும் பாதிக்காத வகையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான அம்சங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இரு தரப்பும் உடன்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மித்த சில நாட்களில் கைச்சாத்திடப்பட்டு மக்கள் பார்வைக்காக பகிரங்கப்படுத்தப்படும்.
பொது இலக்குக்காக கருத்து வேறுபாடுள்ள சக்திகளுடன் இணைந்து செயலாற்றுவது நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுப்பதாக அமையாது என்பதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி தெளிவாகவுள்ளது.
கடந்த காலங்களிலும் இது போன்ற பல அரசியல் கூட்டுக்களில் பங்கேற்றுள்ளதை சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
தேசத்தினதும் சமூகத்தினதும் நலனை கருத்திற்கொண்டு எடுக்கப்படடுள்ள இந்த நிலைப்பாட்டை ஆதரித்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறந்ததொரு மாற்றத்தின் பங்காளர்களாக அனைவரும் இனைந்துகொள்ளுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னனி அழைப்பு விடுக்கின்றது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago