2025 மே 15, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் விழிப்புணர்வு பயிற்சி நெறி

Princiya Dixci   / 2015 ஜூலை 12 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா 
                               
மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர், யுவதிகளுக்கான போதைவஸ்து தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நெறி, மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது. 

'வலுவற்ற மக்களின் மனித மாண்பை மேம்படச்செய்து வறுமையற்ற நிலையை உருவாக்குதல்' எனும் செயற்திட்டத்தின் கீழ் இவ் விழிப்புணர்வு பயிற்சி நெறி இடம்பெற்றது.     
                                      
இப்பயிற்சி நெறியில் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற்  கற்கைகள் நிறுவன மாணவிகள், கிழக்கிலங்கை தொழில் நுட்பக்கல்லூரி மாணவிகள் மற்றும் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரி மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .