Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 12 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வாராந்தம் ஆலயங்களின் பிணக்குகளை தீர்த்துவைக்கும் செயலகமாக மாறிவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர்சபையின் 50வது ஆண்டு நிறைவு பொன் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தென்கிழக்கு ஆசியாவில் வியாபித்திருக்கின்ற சோளர் சாம்ராஜியத்தையும் அதன் எச்சங்களாக நாங்கள் பல நாடுகளுக்குச் செல்கின்றபோது சிவ வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் அதனுடைய கலாசாரங்களும் விழுமியங்களும் இன்றும் அந்த நாடுகளில் எஞ்சியிருப்பதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
அந்தவகையில் மட்டக்களப்பில், பொலன்னறுவையில் சோழர்கால ஆட்சி நடைபெற்றதாகவும் சோழர்கால குடியிருப்புகள் நிறுவப்பட்டதாகவும் ஆலய வழிபாடுகள் விஸ்தரிக்கப்பட்டதாகவும் வரலாற்று சான்றுகள் இருக்கின்றபோதும் அதனை மக்களுக்கு நினைவுபடுத்தும் செயற்பாடாகவே திருத்தொண்டர் சபையின் செயற்பாடுகள் காணப்படுகின்றன என்றார்.
மேலும், இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை பொறுத்தவரையில் ஆலய பிணக்குகளை தீர்க்கும் அலுவலகமாக மாறிவருகின்றது. ஆலயங்கள் தங்களுடைய சமூகத்தின் பணியையும் திருத்தொண்டர்களின் தேவையையும் அவர்களுடைய சமூக பண்பாட்டு தேவைகளையும் நிறைவேற்றுகின்ற செயற்பாட்டிலிருந்து விலகிச்செல்கின்றார்களோ என்கின்ற சந்தேகம் தற்போது அனைவரது மத்தியிலும் தோன்றியிருக்கின்றது.
அனைவரும் இணைந்து சமூகத்தை அறநெறியிலே அதனுடைய பண்பாட்டிலே வழிநடத்தி செல்லவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago