2025 மே 15, வியாழக்கிழமை

த.ம.வி.பு. கட்சி வெற்றிலை சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 13 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

கிரானில் சனிக்கிழமை (11) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை (13) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

கல்குடாத்தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளையும் புன்னைச்சோலையை சேர்ந்த ஒருவரும் போட்டியிடவுள்ளனர். பட்டிருப்பில் இராசமாணிக்கம் சாணக்கியனும் பெரியபோரதீவை சேர்ந்த ஒருவரும் போட்டியிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .