2025 மே 15, வியாழக்கிழமை

'யுத்தப் பாதிப்புக்குள்ளான இளைஞர், யுவதிகளின் வாழ்வு கட்டியெழுப்பப்படும்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 13 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றியடைந்தால்,  கடந்த யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான இளைஞர், யுவதிகளின் வாழ்வை கட்டியெழுப்புவதுடன், எதிர்கால சிறார்களின் கல்வி முன்னேற்றத்துக்கு  அர்ப்பணிப்புடன் சேவையாற்றவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்  கல்குடாத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்  எஸ்.எஸ்.அமல் தெரிவித்தார்.

செங்கலடியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'வடக்கு, கிழக்கு மக்களின் தெரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே உள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றது' என்றார்.   

'35 வருடகால யுத்தம் காரணமாக தமிழ் இளைஞர், யுவதிகள் எந்த சுதந்திரத்தையும் அனுபவிக்கமுடியாத நிலையிலிருந்தனர். தற்போது  எமது இனம் முன்னேற்றப் பாதையில்  நகரவேண்டிய காலகட்டத்தில் உள்ளது. இதை  அனைவரும் உணர்ந்துள்ள நிலையில்,  இதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுக்கவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .