2025 மே 15, வியாழக்கிழமை

சமூக ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான விழிப்புணர்வுப் பேரணி

Princiya Dixci   / 2015 ஜூலை 13 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

சமூக ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காக இன, மத பேதமின்றி ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் சமூக விழிப்புணர்வுப் பேரணி, திங்கட்கிழமை (13) மட்டக்களப்பில் நடைபெற்றது.

போதைவஸ்து பாவனையால் ஏற்படும் வீதி விபத்துக்கள், வீதியை கடக்கும் போது பாதசாரி கடவையை பயன்படுத்துவோம், மது போதையில் வாகனம் செலுத்த வேண்டாம், தொடராக துவிச்சக்கர வண்டியில் செல்ல வேண்டாம் மற்றும் வீதி சமிஞ்சைகளை அவதானியுங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் எந்திச் சென்றனர்.

மத ஸ்ரீ லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இவ் ஊர்வலம், புனித மிக்கேல் கல்லூரியிலிருந்து சிசிலியா பெண்கள் பாடசாலை வரை சென்றது.

பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளுக்கான போக்குவரத்து விதிகள் பற்றிய விளக்கங்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாணவர்களால் வழங்கப்பட்டன. 

கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சுகுமாரன், சிசிலியா பெண்கள் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி அருள் மரியா, புனித மிக்கேல் பாடசாலையின் அதிபர் வெஸ்லியோ வாஸ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .