2025 மே 15, வியாழக்கிழமை

'கிழக்கு மாகாண அபிவிருத்தி முடியும்வரை தேர்தலில் போட்டியிடுவதில்லை'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 14 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எஸ்.எம்.யாசீம்,ஏ.ஜே.எம்.ஹனீபா

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்துமுடிக்கும்வரை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று  அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்று திங்கட்கிழமை (13) தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்;, 'வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு, வெளிநாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்களை தடுத்து சுயதொழில் வழங்குதல்; ஆகியவை உட்பட கிழக்கு மாகாணத்தில் செய்யப்படவுள்ள பாரிய அபிவிருத்திகளை எனது ஆட்சியில் செய்துமுடிக்கும்வரை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை' என்றார்.

'மேலும், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் என்னை களம் இறங்குமாறு  நண்பர்களும் ஆதரவாளர்களும் கேட்டனர்.  ஆனால், இங்கு செய்யவேண்டியுள்ள அபிவிருத்திகளை கருத்திற்கொண்டு  போட்டியிடுவதிலிருந்து நான் பின்வாங்கினேன். இத்தேர்தலானது நல்லாட்சியின் பார்வையில் முக்கியம் வாய்ந்த தேர்தலாகும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .