Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 14 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வாக்கு வங்கியை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மாலை வாவிக்கரையில் உள்ள கட்சி தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குரிய வாக்கு வங்கி என்பது தொடர்ந்து இருந்தவண்ணமேயுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வாக்கு வங்கியை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புகுள் தாக்கம் செலுத்துகின்றது. ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையே அந்த நாட்டின் மக்களின் அபிவிருத்தியாகும். இதில் பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற அடிப்படையில் மிக தெளிவாகவுள்ளோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago