2025 மே 15, வியாழக்கிழமை

'புரையோடிப்போன இனப் பிரச்சினைக்கு தேர்தல் மூலம் தீர்வு காணப்படும்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 14 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

65 வருடகாலமாக  புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு  காணும் ஒரு தேர்தலாக  எதிர்வரும் பொதுத்தேர்தல் அமையும் என்;று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  தலைமை வேட்பாளராக போட்டியிடும் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்துடன் இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை  ஏற்படுத்தி அதன் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று திங்கட்கிழமை (13)  பூர்த்தியடைந்துள்ளன.  இதன் பின்னர் காந்திபூங்காவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .