2025 மே 15, வியாழக்கிழமை

நாம் திராவிடர் கட்சின் உபசெயலாளர் பதவி விலகுவதாக அறிவிப்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 14 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்

நாம் திராவிடர் கட்சின் உபசெயலாளர் பதவியிலிருந்து தான் விலகபோவதாக  கட்சின் உபசெயலாளர் தட்சணாமூர்தி கமலநாதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கட்சியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (14) அனுப்பியுள்ள  கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'நாம் திராவிடர் காட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் உப செயலாளராக செயற்பட்டு வருகின்றேன். எனக்குக் கிடைத்த இப்பதவியினை வைத்துக் கொண்டு கட்சியின் முன்னேற்றத்திற்காகவும் எமது மக்களின் தேவைகளைப் பூர்தி செய்யவும் அயராது ஈடுபட்டு வந்தேன்.

இந்நிலையில் கட்சித் தலைமையின் தன்னிச்சையான, வெளிப்படைத் தன்மையற்ற செயற்பாடுகள் காரணமாக தொடர்ந்து எனது  பணியை முன்னெடுத்துச் செல்ல முடியாதுள்ளது.

எனவே, இப்பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .