Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 25 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு தென்னை பயிர்ச் செய்கை சபையினால் இராணுவத்தினருக்கு தென்னை பயிர்ச் செய்கை தொடர்பிலான பயிற்சி, நேற்று வெள்ளிக்கிழமை (24) நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு 231ஆவது இராணுவ கட்டளை தலைமையகத்தில் கட்டளைத் தளபதி பிரிகேடியர் என்.டி.எஸ்.பி.நியுள் ஹல்லவின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு தென்னை பயிர்ச் செய்கை முகாமையாளர் திருமதி பி.ரவிராஜ் உட்பட தென்னை பயிர்ச் செய்கை சபை அதிகாரிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சி நெறியில் மட்டக்களப்பு 231ஆவது இராணுவ கட்டளை தலைமையகத்தின் 60 இராணுவ அதிகாரிகள் பங்கு கொண்டனர்.
மட்டக்களப்பு தென்னை பயிர்ச்செய்கை சபையினால் மேற்கொள்ளப்படும் இப்பயிற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு தென்னை பயிர்ச் செய்கை முகாமையாளர் திருமதி பி.ரவிராஜ்க்கு மட்டக்களப்பு 231ஆவது படைப்பிரிவு கட்டளைத்தளபதியினால் நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago