2025 மே 15, வியாழக்கிழமை

தாயை வாளால் வெட்டிய முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர் கைது

Thipaan   / 2015 ஜூலை 26 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தனது தாயை வாளால் வெட்டி காயப்படுத்திய முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர் ஒருவரைத் தாம் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

ஏறாவூர் பிரதேசத்தில் வசிக்கும் எம். புஸ்பராணி (வயது 59) என்பவரை வெள்ளிக்கிழமை இரவு அவரது மகன் தலையிலும் உடலின் வேறு பகுதிகளிலும் வாளால் வெட்டி படுகாயப்படுத்தியுள்ளான்.

உடனடியாக தாய் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் நடைபெற்று சற்று நேரத்தில் குறித்த பெண்ணின் மகனான பத்தக்குட்டி சுரேஷ் (வயது 37) எனும் சந்தேக நபரை ஏறாவூர்ப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் எல.;ரீ.ர.Pஈ. இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கூறிய பொலிஸார், புலிகள் இயக்கத்தில் இருந்தபோது, கண்ணொன்றையும் கையொன்றையும் குறித்த நபர் இழந்திருந்தார் எனவும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .