Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 26 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.வடிவேல் சக்திவேல்
தேர்தல்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு இட்டுச்சென்றது வரலாற்று உண்மையாகும். இதன் விளைவாகவே, இன்று நாம் சொல்லொணாத் துயரங்களை அனுப்பவிப்பதுடன், உயிர், உடைமைகளையும் இழந்து அரசியல் அநாதைகளாக உள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கிருஸ்ணபிள்ளை சிவநேசன் தெரிவித்தார்.
பெரியபோரதீவிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை (25) மாலை நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'எமது இனத்தின் பின்னடைவுகளுக்கு தமிழ் அரசியல் தலைமைகளே காரணம். ஏனெனில், தூர நோக்கற்ற வெறுமனே தேர்தல் வெற்றிக்காக ஒன்றிணைந்த அரசியல்வாதிகள் தமிழ் ஈழத்துக்கான மக்கள் ஆணையைக் கூறி மக்களிடமிருந்து அமோக வெற்றியீட்டினர்.
இந்தத் தேர்தலில் 20 ஆசனங்களைப் பெறுவதற்கு ஒன்றிணைந்து வாக்களிக்குமாறும் 2016ஆம் ஆண்டு இனப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றர்' என்றார்.
'பல தசாப்தகாலமாக புரையோடிப்போயுள்ள அரசியல் பிரச்சினைக்கு வெறுமனே ஓர் ஆண்டுக்குள் தீர்வு பெற்றுத்தருவதாகக் கூறுவது, மீண்டும் எம்; இனத்தை ஏமாற்றும் கபட நாடகமாகும். அரசியல் தீர்வைப் பெறுவதற்கு எதற்காக 20 நாடாளுமன்ற ஆசனங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன' எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago