2025 மே 15, வியாழக்கிழமை

'வாக்களிப்பு வீதம் அதிகரிப்படவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 26 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதே தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கமுடியும் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்

மட்டக்களப்பு, துறைநீலாவணையில் ஆதரவாளர்களுடன் சனிக்கிழமை (25) மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், அவ்வாறு இல்லாவிடின், எமது பிரதிநிதித்துவத்தை இழக்கவேண்டி ஏற்படுமென்பதுடன்,  அப்பிரதிநிதித்துவம்  வேறு இனத்துக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது' என்றார்.

'தமிழ் மக்களுக்கான உரிமையை பெறுவதற்காக எமது இளைஞர்களினால் ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டு, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக வழியில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.

'எதிர்வரும் பொதுத்தேர்தலில் வட, கிழக்கில் 18 முதல்  20 க்கும் இடையிலான  ஆசனங்களை பெற்று பேரம் பேசும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாற்றவேண்டும். அப்போதே, ஆட்சி அமைக்கவுள்ள அரசாங்கத்துடன் எம்முடைய  உரிமைப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும். அதற்கு எங்களின் வாக்குப்பலமே மேலானது. ஒவ்வொருவரும் தங்களது வாக்கை அவசியம்  அளிக்கவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .