2025 மே 15, வியாழக்கிழமை

'சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தரவும்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 28 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் கடமையில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருமாறு மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு அச்சங்கம் நேற்று திங்கட்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் கடமையில் பங்குபற்றுவதற்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகின்றது.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் அரசியல் கட்சிகளுடன் சார்ந்து செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவ்வாறு மறுக்கப்படுகின்றது.

ஒரு சில ஊழியர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த ஊழியர்களுக்குமான சலுகைகள் மறுப்படுவது நியாயமற்றதாகும்.

தேர்தல் விதிகளை மீறுவோருக்கான சட்ட நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.குற்றம் செய்தவரை கண்டுபிடித்து தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். எனவே, தேர்தல் கடமையில் ஈடுபடுவதற்கான சலுகைகளை வழங்குவது தொடர்பான சாதகமான பதிலை விரைவில் பெற்றுத்தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .