2025 மே 15, வியாழக்கிழமை

கால்நடைகளுக்கான மருந்துகளை தும்பங்கேணியிலும் பெறலாம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 28 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு தேவையான சகலவித மருந்து வகைகளையும் தும்பங்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள அமுதசுரபி பால் பதனிடும் நிலையத்தில் மொத்தமாகவும் சில்லறையாகாகவும் நியாய விலையில் பெற்றுக்கொள்ள முடியுமென்று போரதீவுப்பற்றுப் பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை அபிவிருத்திச் சங்கத் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமையிலிருந்து இது நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுவரை காலமும் கால்நடைகளுக்குரிய மருந்துகளை கல்முனை, மருதமுனை, மட்டக்களப்பு போன்ற இடங்களுக்குச் சென்றே கால்நடைப் பண்ணையாளர்கள் பெற்றுவந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .