2025 மே 15, வியாழக்கிழமை

ஸ்ரீதாந்தாமலை முருகன் கோவிலுக்கு யாத்திரை

Suganthini Ratnam   / 2015 ஜூலை 28 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

கிழக்கில் சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் ஸ்ரீதாந்தாமலை முருகன் கோவிலுக்கு நான்காவது தடவையாக பாதயாத்திரை செல்வதற்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர் ஏ.ராயூ தெரிவித்தார்.

கோட்டைக்கல்லாறு ஸ்ரீஅம்பாரைவில் பிள்ளையார் கோவிலிலிருந்து நாளை புதன்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு யாத்திரை ஆரம்பமாகி, மறுநாள் வியாழக்கிழமை ஸ்ரீதாந்தாமலை முருகன் கோவிலை சென்றடையுடம். இதில் இணைந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் அனைவரும் உரிய நேரத்துக்கு வருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்ரீதாந்தாமலை கோவிலின் வருடாந்த மஹோற்சவம் கடந்த  11.07.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இந்நிலையில், எதிர்வரும் 01.08.2015 அன்று காலை தீர்த்;தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .