Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 28 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
வட, கிழக்கு மக்களின் உரிமைப் பிரச்சினை தற்போது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறும் தேர்தல் முடிவு சர்வதேசத்தின் அவதானிப்பில் இருக்கும். ஆகையால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி அடையச் செய்யவேண்டும் என்று கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்
மட்டக்களப்பு, மண்டூரில் திங்கட்கிழமை (27) மாலை நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'வட, கிழக்கு மக்களின் அரசியல்த் தீர்வு தொடர்பில் த.தே.கூ. வின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் சர்வதேசத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு, சர்வதேசத்தின் கவனம் வட, கிழக்கு மக்களின் உரிமைப் பிரச்சினை தொடர்பாக ஈர்த்துள்ள நிலையில் எதிர்வரும் தேர்தல் முடிவை சர்வதேசம் அவதானிக்கும். இந்த முடிவு தமிழ் மக்களின் கையில் தங்கியுள்ளது' என்றார்.
'மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவீதமாக இருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். நான்கு நாடாளுமன்ற பிரதிநிதிகளை தெரிவுசெய்யவேண்டும். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒருமித்து வாக்களிப்பதனாலேயே தெரிவுசெய்யலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் எட்டு வேட்பாளர்களில் உங்களுக்கு பிடித்த எவராக இருந்தாலும், நீங்கள் அவருக்கு வாக்களித்து தெரிவுசெய்யலாம்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago