2025 மே 15, வியாழக்கிழமை

மிச் நகரில் தேர்தல் வன்முறைச் சம்பவம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 29 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தேர்தல் வன்முறைச் சம்பவமொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச் நகர் பிரதேசத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச்நகர் ஆயுர்வேத வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றின் மீது கோஷ்டியொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அந்த வீட்டு கதவு, யன்னல் மற்றும் தளபாடங்கள்; சேதமடைந்துள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது.
வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை படலையை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த கோஷ்டியினர், உடைமைகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .