2025 மே 15, வியாழக்கிழமை

'தமிழர்களின் பிரதேசங்கள் பின்தங்கியதாக இருக்கக்கூடாது'

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

தமிழர்களுடைய பிரதேசங்கள் எப்பொழுதும் பின்தங்கிய பிரதேசமாக இருக்கக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இ.சாணக்கியன் தெரிவித்தார்.

மாலையர்கட்டுப் பிரதேசத்தி;ல் திங்கட்கிழமை (03) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 40 வருடங்களாக  எமது இனம் பின்தங்கி இருக்கின்றது. முக்கியமாக, பட்டிருப்புத்தொகுதி பின்தங்கியிருக்கிறது. இதனை மாற்றியமைக்க வேண்டும்' என்றார்.

'தமிழர்களுடைய அரசியல் பலம் முக்கியமானது.  நீங்கள் எடுக்கும் முடிவே எதிர்காலத்தை தீர்மானிக்கும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .