Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித், எஸ்.பாக்கியநாதன், வா.கிருஸ்ணா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் வழமை போன்று இம்முறையும் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் தெரிவித்தது.
'வேட்பாளர் நியமனத்தில் தொடர்ந்தும் பெண்கள் புறக்கணிப்பு' என்ற தலைப்பில் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியது.
அந்த அறிக்கையில், 'இம்மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வழமை போன்று பெண் வேட்பாளர்களின் தொகை மிகக் குறைவாகவுள்ளது. கணிசமானளவு பெண்; வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டும் என்று இலங்கையிலுள்ள பல பெண்கள் அமைப்புக்கள் தொடர் கோரிக்கை விடுத்த காலகட்டத்தில், இந்தக் கோரிக்கையை உதாசீனப்படுத்தும் வகையில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இம்முறை பெண்கள் மாத்திரமே ஓர் அரசியல் கட்சியின் வேட்பாளர்களாக ஒரு மாவட்டத்தில் போட்டியிடும் சாதகத்தன்மையை நாம் அங்கிகரிக்கின்றோம். இருப்பினும், பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பதற்கு இது மாத்திரம் போதுமானது அல்ல. அடையவேண்டிய இலக்குக்கு நீண்டதூரம் உள்ளது.
பெண் வேட்பாளர்களை ஏன் நியமிக்கவில்லை என்று அரசியல் கட்சிகளிடம் கேட்டால்; பெண்கள் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். பெண்கள் முன்வருவதில்லை என்று கூறுகின்றனர். ஆனால், பெண்கள் முன்வருவதற்கான சூழலை ஏற்படுத்துவதும் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் சமத்துவத்திலும் சமூக நீதியிலும் நம்பிக்கையுள்ள அரசியல்; கட்சிகளின் தார்மீகக் கடமையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் 368 வேட்பாளர்கள் மத்தியில் 19 பேரே பெண்கள். அதிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக ஐந்து பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என அந்த அறிக்கையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .