Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் இந்த நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி தனிப் பெரும் கட்சியாக பலம் பொருந்திய ஆட்சியை அமைக்கவுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
தேர்தல் பிரசார காரியாலயத்தை கோவில்போரதீவில் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்' என்றார்.
'மேலும், சுமார் 68 வருடகாலமாக தமிழ்க்; கட்சிகளுக்கு வாக்களித்து, வாக்களித்து எதுவித பலனும் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்தும்; நியாயமான முறையில் தீர்க்கப்படுவதற்கு அரசியல் சாசனம் ஒன்று எழுதப்பட்டு நாடாளுமன்றத்தில் அந்த சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .