Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
தங்களின் கிராமங்களில் காணப்படுகின்ற குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்துத் தருமாறு கோரி மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உன்னிச்சைக் குளத்துக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
'நாங்கள் நோய் நொடியின்றி வாழ நல்ல குடிநீர் தாருங்கள்', 'நகரங்களில் வாழும் அதிகாரிகளே செல்வந்தர்களே உங்களது குழந்தைகள் போன்று எம்மையும் சற்றுச் சிந்தித்துப்பாருங்கள்', 'வேண்டும் வேண்டும் குடிநீர் வேண்டும்', 'அரசியல்வாதிகளை நம்பிப்பலனில்லை அதிகாரிகளே தண்ணீர் தாருங்கள்', 'தீராத தாகத்திற்கு தீர்வு வேண்டும்', 'குடும்ப சுமையைத் தாங்கத் துடிக்கும் எங்களுக்கு தண்ணீர் சுமையுமா' உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திறகு வருகை தந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், அவர்களின் கோரிக்கைகளை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .