Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு தேவையில்லை என்று கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆதரவு வழங்குவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியமை தொடர்பில் அவரிடம் நேற்று கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'முரளிதரன் மக்கள் செல்வாக்கு இல்லாதவர். தமிழ் மக்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. அதேபோல், எந்தக் கட்சியும் அவரை சேர்த்துக்கொள்ளவும் இல்லை. இதனாலேயே, தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்' என்றார்.
'இவரின் ஆதரவு இன்றி பல தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அவ்வாறே, இம்முறையும் தேர்தலில் வெற்றி பெறுவோம்.இருந்தபோதிலும், இப்போதாவது கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதை நாங்கள் வரவேற்கின்றோம். அவரது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு என்பது காலம் கடந்த ஞானோதயமாகும்' என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .