Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகி;ச்சை பெற்றுவருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான எச்.எம்.எம்.றியாழை ஆதரித்து மூன்றாம் வட்டாரம் ஓட்டமாவடியில் கட்;சியின் ஆதரவாளர் ஒருவரினுடைய இல்லத்தில் நடைபெற்ற தேர்தல் கலந்துரையாடலின்போது, இடைநடுவில் புகுந்த ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் ஆதாரவாளர்கள் சிலர் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த கட்சியின் ஆதரவாளர் அ.உமர்ஹசன் (வயது 24 ), அவரது மனைவி பாத்திமா சப்ரா (வயது 20) மற்றும் மூன்று வயதுக் குழந்தை அக்மா ஹிஸ்மி ஆகியோர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பாத்திமா சப்ராவின் இடது கை விரலில் ஒரு பகுதி கடித்து துண்டிக்கப்பட்டதினால் இவர் மேலதிக சிகிச்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .