Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.எம்.எஸ்.எம்.நூர்தீன்
சகல கண்காணிப்பாளர்களும் பக்கச்சார்பின்றி;யும் நடுநிலையானவர்களாகவும் செயற்பட வேண்டியது அவசியமாகும்; என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
தேர்தல் கண்காணி;ப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் தேர்தல் சட்டமும் பற்றிய பயிற்சி, காத்தான்குடி சம்மேளன மண்டபத்தில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ்; தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கண்காணிப்பாளர்களின் நடவடிக்கைகள் மிகவும் வெளி;ப்படையானதாக இருக்க வேண்டும். தங்களது பேச்சினாலும் நடவடிக்கையினாலும் பக்கச்சார்பு அற்ற முறையில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதையும் அது ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்கு மக்களின் நன்மைக்காக நடைபெறுகிறது என்பதை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.
'மேலும், அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது போட்டியாளர்களுக்கு எதிராக அதிக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது, இதனை கண்காணிப்பாளர்கள் நன்றாக அவதானித்து அறிக்கை செய்ய வேண்டும்.
தேர்தல் சட்;டத்தின் பிரகாரம் தேர்தல் குற்றங்களாக தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் சுவரொட்டிகள், கொடிகள், பதாகைகள் போன்றவற்றை பொது இடங்களி;ல் காட்சிப்படுத்துதல், அச்சிடுபவர், பதிப்பாளர் ஆகியோரின் பெயர், முகவரி இன்றி பிரசார வெளியீடுகளை அச்சிட்டு வெளியிடுதல், நியமனப்பத்திரங்களை போலியாகத்; தயாரி;த்தல், அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டை காண்பித்தல், வாக்குச்சீட்டு தவிர வேறு எதனையும் வாக்குசீட்டுப் பெட்டிக்குள் இடுதல், வாக்குச்சீட்டை அழித்தல், வாக்குச்சீட்டை வெளியில் கொண்டு செல்லுதல், தெரிவத்தாட்சி உத்தியோகஸ்தருக்கு போலி வேட்புமனு வழங்குதல், புள்ளடி இட்ட வாக்குச்சீட்டை வேண்டும் என்று வாக்களிப்பு நிலையத்தில் காட்சிப் பொருளாக்குதல் போன்றவைகளும் தேர்தல் குற்றமாகும்' எனவும் அவர் தெரிவித்தார்.
'வாக்களிப்பு நிலையத்தினுள் ஆள் அடையாளத்தை நிரூபி;க்கக்கூடிய பின்வருவனவற்றை கொண்டுசெல்ல முடியும். தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவாளர் திணைக்களத்தினால் வழங்கப்டுகின்ற மதகுருமாருக்கான அடையாள அட்டை, தேர்தல் செயலகத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பனவற்றில் ஒன்றை அங்கிகரிக்க முடியும்.
உயிருடன் இருக்கும் அல்லது இறந்த ஒருவருக்காக இன்னொருவர் நேரிலோ அல்லது தபால் மூலமோ வாக்களித்தால், இக்குற்றங்களுக்கு பிடிவிறாந்து இன்றி குற்றம் செய்தவரை கைதுசெய்ய முடியும். இவரது குற்றம் நீதிமன்றித்தில் நிரூபி;க்கப்பட்டால் சிறைத்தண்டனையும் அபராதமும் செலுத்த வேண்டி ஏற்படும்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago