2025 மே 14, புதன்கிழமை

மட்டக்களப்பில் 10 ரூபாய் நாணயக்குற்றிகளுக்கு தட்டுப்பாடு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.எம்.எஸ்.எம்.நூர்தீன்

பத்து ரூபாய் நாணயக்குற்றிகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக வியாபாரிகளும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

பொருட்கள் கொள்வனவுக்காக வரும் பொதுமக்களுக்கு அவர்கள் வழங்கும் பணத்துக்கு மீதித் தொகையாக பத்து ரூபாய் வரும் பட்சத்தில் அதை வழங்குவதற்கு பத்து ரூபாய் நாணயக்குற்றிகள் இல்லாமலுள்ளதாக காத்தான்குடியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் தெரிவித்தார்.

இதனால் நுகர்வோரும் வியாபாரிகளும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக காத்தான்குடி மக்கள் வங்கியின் முகாமையாளர் எஸ்.அழகுராஜாவிடம் நேற்று புதன்கிழமை கேட்டபோது, 'பத்து ரூபாய் நாணயக்குற்றிகளின் புழக்கம் குறைவடைந்துள்ளது. மேலும், பத்து ரூபாய் நாணயக்குற்றியை  சிறுவர்கள் சேமிப்பு செய்வதினாலும் கோவில் உண்டியல்களில்  இந்த பத்து ரூபாய் நாணயக்குற்றிகளை இடுவதினாலும்  இதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .