Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
ஊனமுற்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துடைத்தெறிந்து சாதாரணமானவர்களைப் போன்று அவர்களையும் சமூகத்தில் உலாவச் செய்யும் வகையிலான விசேட விழிர்ப்புணர்வு நடனப் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சிப்பட்டறை விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம், சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
உலகளாவிய ரீதியில் ஊனமுற்றவர்களின் நலன்களுக்கு சார்பாக செயற்பட்டுவரும் விஸிபிலிட்ரி எனும் அமைப்பின் ஏற்பாட்டில் சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில்; இந்தப் பயிற்சிப்பட்டறை நடைபெறுமென்பதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி பிற்பகல் நடன நிகழ்வு காந்தி பூங்காவில் நடைபெறவுள்ளது.
ஊனமுற்றவர்களையும் ஊனம் அற்றவர்களையும் இணைத்து கலப்பு முறையிலான நடனப் பயிற்சிப்பட்டறை நடத்தப்படவுள்ளது. அம்பாறை, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும்; இவ்வாறான நிகழ்வுகளை நடத்தவுள்ளதாகவும் விஸிபிலிட்ரி அமைப்பினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
30 minute ago
41 minute ago
47 minute ago