2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

25 தச்சுத்தொழிலாளர்களுக்கு உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 24 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில்  25 தச்சுத்தொழிலாளர்களுக்கான உபகரணங்களை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் திங்கட்கிழமை (23) வழங்கிவைத்தார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம்; தலைமையில்  அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,  பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்துத் தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் 25ஆவது நிலையிலிருந்தது.  தற்போது  04 மாவட்டங்களை வென்றுள்ளது. இனிமேல் எமது மாவட்டம் வறுமையின்றி சகல சிறப்புடனும் முன்னேற்றமடைய வேண்டும். இதற்கு நாங்களும் எமது இளம் சமுதாயமும் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியில் பலம் படைத்தவர்களாக மாறவேண்டும். கல்வி, சிறந்த விவசாயம், அறிவுபலம், மனபலம் என்பவற்றை நாங்களும் எங்களது பிள்ளைகளுக்கும் வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .