2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

300 குடும்பங்களுக்கு உலர் உணவுகள்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 07 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியிலுள்ள விசேட தேவையுடையோர் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும்  300 குடும்பங்களுக்கு  உலர் உணவுப் பொருட்களை காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு  ஞாயிற்றுக்கிழமை (06) வழங்கியுள்ளன.

காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 31ஆவது சமூகத்தை நோக்கிய பயணத்தின் ஒரு  கட்டமாக  தலா குடும்பத்துக்கு 05 கிலோ அரிசி உட்பட 1,500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊக்குவிப்பு  உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், அம்பாறை உதவி பிரதேச செயலாளர் ஏ.எல்.அன்சார் நழீமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X