2025 மே 19, திங்கட்கிழமை

313 பட்டதாரிகளுக்கு நாளை ஆசிரியர் நியமனம்

Editorial   / 2018 மார்ச் 02 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தைச்  சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு  நாளை சனிக்கிழமை (03) நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க இன்று (02) தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைக்கவுள்ளார்.

சிங்கள மொழி மூலம் 222 பட்டதாரிகளுக்கும், தமிழ் மொழி மூலம் 91 பட்டதாரிகளுக்கும் குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X