2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

32 கிராமியப் பாலங்களைப் புனரமைக்கும் திட்டம்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 11 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'கிராம மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தல்' எனும் திட்டத்தின் கீழ், கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்மொழியப்பட்ட 32 கிராமியப் பாலங்களை புனரமைக்கும் வேலைத்திட்டம், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், இன்று தெரிவித்தார்.

வக்கியல, கண்ணபுரம், கெவிளியாமடு ஆகிய கிராமங்களில் 5 பாலங்கள் புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளன.   9 பாலங்கள் புனரமைக்கப்பட்ட நிலையில், மக்களின் பாவனைக்கு விடப்படவுள்ளன.

மேலும், 8 பாலங்களைப் புனரமைப்பதற்கான ஆயத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 10 புனரமைக்கப்பட வேண்டியுள்ளன எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X