2025 மே 02, வெள்ளிக்கிழமை

4 பள்ளிவாசல்களின் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத்  தனது நாடாளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட இந்த ஆண்டுக்கான  நிதியிலிருந்து  36 இலட்சம் ரூபாவை ஏறாவூர் பிரதேசத்திலுள்ள 04  பள்ளிவாசல்களின் புனரமைப்புக்கு  ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஏறாவூர் நகரசபை உறுப்பினருமான எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

ஏறாவூர் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் இரண்டாம் கட்ட புனரமைப்புக்காக  30  இலட்சம் ரூபாவையும் ஏறாவூர் ஹஸன் ஹுஸைன் பள்ளிவாசலுக்கு 300,000  ரூபாவையும் ஜாமியுல் அக்பர் பள்ளிவாசலின் குடிநீர் இணைப்புக்காக 200,000 ரூபாவையும்  ஏறாவூர் றிபாய் பள்ளிவாசலுக்காக 100,000 ரூபாவையும் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0

  • வை.எல்.மன்ஸூர் Monday, 14 July 2014 03:06 AM

    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X