2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

40 இலட்சம் ரூபாய் செலவில் பதுறியா சதுக்கம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி பதுறியா பள்ளிவாயலுக்கு முன்பாக பதுறியா சதுக்கத்தினை நிர்மாணிப்பதற்கு  பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாற்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எம்.அலிசப்ரி,  பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இச்சதுக்கம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை(13) இடம்பெற்றது.

புதிய காததான்குடி பதுறியா ஜும் ஆ பள்ளிவாயலின் தலைவர் வி.ரி.எம்.ஹனிபாவின் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X