2025 மே 02, வெள்ளிக்கிழமை

50 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 09 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் 50 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவை யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவுகளின் ஒன்றியம் புதன்கிழமை (09) வழங்கியுள்ளது.

மேற்படி ஒன்றியத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் பணம்  வைப்புச் செய்யப்பட்ட  வங்கிப்புத்தகங்களையும் உண்டியல்களையும் இப்பிள்ளைகளுக்கு மேற்படி ஒன்றியத்தின் தலைவர் வி.மகேஸ்வரன் வழங்கிவைத்தார்.

முதற்கட்டமாக தலா பிள்ளைக்கு மாதமொன்றுக்கு 500 ரூபா படி வழங்கவுள்ளதாகவும் வி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் 50 பிள்ளைகளுக்கு இப்புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X