2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

6 இந்தியர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

இந்தியாவிலிருந்து சுற்றுலா விஸாவில் வந்து தொழிலில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 6 இந்தியர்களை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிக்குடி நீதவான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிக்குடி நீதவான்களின் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை இச்சந்தேக நபர்களை  பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.

சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் இந்த 6 இந்தியர்களும்  வேளாண்மை அறுவடை வேலையில் ஈடுபட்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கரடியனாறு, கொக்கட்டிச்சோலை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமையும் நேற்று சனிக்கிழமையும் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கரடியனாறு, தும்பாலஞ்சோலை பிரதேசத்தில் 2 பேரும்  வெல்லாவெளியில் ஒருவரும்; களுவாஞ்சிக்குடியில் ஒருவரும்  கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா பிரதேசத்தில்  2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கிழக்கில் வேளாண்மை அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து வேளாண்மை அறுவடை இயந்திரத்தில் வேலை செய்வதற்காக பலர் இங்கு வந்து இவ்வாறு தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் சரியான வேலைக்கான அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்காத நிலையில் தொழிலில் ஈடுபடுவதால் இவ்வாறான கைதுகள் மேற்கொள்ளப்படுவதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .