2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

79,580 குடும்பங்களுக்கு ரூபாய் 5,000 வழங்கல்

Princiya Dixci   / 2021 ஜூன் 07 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களில் 79,580 குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து, வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களுக்கு  5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

அதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழன், வெள்ளி, மற்றும் சனிக்கிழமை வரையான மூன்று நாள்களில் 79,580 குடும்பங்களுக்கு 39 கோடியே 79 இலச்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

மாவட்டத்தில் சமுர்த்தி உதவி பெற்றுவருகின்ற சுமார் 78,584 குடும்பங்களுக்கும் முதியோர் கொடுப்பனவை பெற்றுவருகின்ற 996 குடும்பங்களுக்கும்  இவை வழங்கப்பட்டுள்ளதுடன், இந்தக் கொடுப்பனவு கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X