2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

8 வயது சிறுமி படுகொலை

Kogilavani   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் குவைத் சிற்றி எனும் பகுதியில் புதன்கிழமை(10) 8 வயதுச் சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கனர்.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலையுடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைதுசெய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் காத்தான்குடி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X