2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

8 மாடுகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜூன் 05 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சட்டவிரோதமான முறையில் சிறிய வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட 8 மாடுகளை மட்டக்களப்பு, கல்லடிப் பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

அத்துடன், இந்த மாடுகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் இருவரைக் கைதுசெய்துள்ளதுடன், மாடுகள் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

ஏறாவூரிலிருந்து காத்தான்குடிக்கு கொண்டு சென்ற  மாடுகளே இடைவழியில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் கூறினர்.

வாகனத்துடன் மீட்கப்பட்ட இந்த மாடுகள்  காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த மாடுகளைக் கொண்டு செல்வதற்கு ஏறாவூர் நகரசபை அதிகாரிகளிடமோ, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடமோ அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X