2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அகதிகளாக சென்ற இலங்கைத் தமிழர்கள்

Freelancer   / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக  மட்டக்களப்பைச்  சேர்ந்த  ஒரு பெண்,  சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த  3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று புதன்கிழமை (20) அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை  மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X