Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு - பதுளை வீதிப் பகுதியை அண்டியுள்ள வடிச்சல், ஊத்துச்சேனை கிராமங்களை சேர்ந்த மக்கள் மீள்குடியேறிய நிலையில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டுமென ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம்.ஷயீட் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்த அவர் 'விவசாய வளத்துடன் பூர்வீகமாக இந்தக் கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் 1985 மற்றும் 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற இனப்படுகொலைச் சம்பவங்களின்போது தங்களின் பூர்வீக இடங்களை விட்டு வெளியேறி அகதிகளானார்கள்.
பின்னர், கிழக்கு மாகாணம் பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் வடிச்சல் மற்றும் ஊத்துச்சேனைக் கிராமங்களை சேர்ந்த சுமார் 39 குடும்பங்கள் சுயமுயற்சியின் பேரில் தங்களின் பூர்வீகக் கிராமங்களில் மீள்குடியேறினர். இருப்பினும், இந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கான எந்தவொரு உதவிகளையும் அரசாங்கமோ, அரசசார்பற்ற நிறுவனங்களோ, அரசியல்வாதிகளோ செய்து கொடுக்கவில்லை' என்றார்.
'இந்த மக்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்யமுடியாத நிலையில் அல்லல்பட்டு வாழ்ந்து வருகின்றனர். குடிநீர், மலசலகூடம், பாடசாலை, வாழ்வாதார உதவிகளின்றி இந்த மக்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே, மேற்படி கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர்பில் அரசாங்கமும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் கவனற்கொள்ள வேண்டும். அல்லல்படும் இந்த மக்களுக்கு இந்த நல்லாட்சியிலாவது நல்லது நடக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago